அத்திவரதரை தரிசிக்க வந்த 3 பேர், கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 வருடங்களுக்கு ஒரு முறை அத்திவரதர் காட்சித் தந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதியிலிருந்து பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்ற நிலையில் இன்று கூட்ட நெரிசலில் 100 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது அத்திவரதரை தரிசிக்க வந்த 3 பக்தர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்திவரதரை தரிசிக்க நீண்ட கூட்டம் வரிசையில் நின்றபோது, கூட்டம் திறந்துவிடப்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய நடராஜன், கங்காலட்சுமி, நாராயணன் ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர்.