Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அத்திவரதரை தரிசித்த வரிச்சியூர் செல்வம் – விவிஐபி பாஸ் கொடுத்தது யார் ?

Advertiesment
அத்திவரதரை தரிசித்த வரிச்சியூர் செல்வம் – விவிஐபி பாஸ் கொடுத்தது யார் ?
, வியாழன், 18 ஜூலை 2019 (14:14 IST)
அத்திவரதரை விவிஐபி பாஸில் சென்று பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் வழிபட்டது எப்படி என சர்ச்சைகள் எழுந்துள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். அத்திவரதரை சந்திக்க பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ஆகியோர் விஐபி வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து நேற்று விஐபி வரிசையில் வரிச்சூர் செல்வம் என்ற பிரபல ரவுடி தரிசனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது தமிழகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்டை கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் அவர் குடியரசுத்தலைவர் அமர்ந்து தரிசித்த அதே இடத்தில் அமர்ந்து வழிபாடு செய்தது எப்படி என்றும் அவருக்கு விவிஐபி பாஸ் கொடுத்தது யார் என்றும் கேள்விகள் எழுந்தன. இந்நிலையி இப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மூலமே அந்த பாஸ்கள் வழங்கப்பட்டதாகவும், பொன்னையாவுக்கு துணை முதல்வர் அலுவலகத்தில் இருந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆறு பேர் மரணத்துக்குக் காரணமான முதல்வர் ராஜினாமா செய்யணும்- வைகோ