Publish Date: Sat, 02 Jan 2021 (17:41 IST)
Updated Date: Sat, 02 Jan 2021 (17:56 IST)
விருத்தாசலம் அருகே கருவேப்பிலைக் குறிச்சி அருகே டிராக்டர் மோதி 2 வயது பெண் குழந்தை பலியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியின் சாலை அருகே 2 வயது பெண் குழந்தையான தன்யஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தபோது சாலையில் வந்த டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற அவரின் தாயாரும் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த போலிஸார் இதுபற்றி வழக்குப் பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் விசாரணையும் நடந்து வருகிறது.