Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிறந்த குழந்தைக்கு பிரபல நடிகரின் பெயர் வைத்த தாய் ! நெகிழ்ச்சி சம்பவம்

Advertiesment
பிறந்த குழந்தைக்கு பிரபல நடிகரின் பெயர் வைத்த தாய் ! நெகிழ்ச்சி சம்பவம்
, வியாழன், 31 டிசம்பர் 2020 (21:37 IST)
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா கால  ஊரடங்கு இந்தியா முழுவதும் அமலில் உள்ள நிலையில் பிரபல நடிகர் சோனு சூட், எந்தவித பிரதிபலனையும்  பார்க்காமல் பல மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் , வெளிநாடுகளில் தவித்த இந்திய மாணவர்களுக்கு வினாம உதவும், புலம்பெயர் தொழிலாளார்களுக்கு பேருந்து, ரயில் வசதி செய்தும், விவசாயிகளுக்கு டிராக்டர் வசதியும்,மாணவர்களின் படிப்புக்கு உதவியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என தன் சொத்துகளை அடமானம் வைத்து உதவி வருகிறார்.

அவரை இந்திய மக்கள் கடவுள் போல் கோயில் கட்டி சிலை வைத்து வழிபட்ட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஒரு பெண் தனக்குப் பிறந்த குழந்தை குறை மாதத்தில் எடை குறைந்துள்ளதால் ஆபத்திலுள்ளதாகவும் அதனால் உதவும்படி நடிகர் சோனு சூட்டைக் கேட்டுக்கொண்டார்.

அதன்படி அம்மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களுடன் தொடர்புகொண்டு மேற்கொண்டு சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ததால் குழந்தை காப்பாற்றப்பட்டது. இப்போது குழந்தை நல்ல நிலையிலுள்ளது.

எனவே சோனு சூட்டிற்கு நன்றி தெரிவித்து அந்தப் பெண் தனது குழந்தைக்கு சோனு என்று பெயர் வைத்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சோனு  சூட் தனது டுவிட்டர் பக்கத்தில் ’’மற்றொரு சோனு வீட்டிலுள்ளார்.நன்றி மருத்துவர் சுகுமார்’’என்று பதிவிட்டுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரமாண்டமான இந்தி படத்தில் விஜய்சேதுபதி... விஜய் பட ஹீரோயின்...