பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

Prasanth K
புதன், 25 ஜூன் 2025 (19:31 IST)

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இந்தியா முழுவதும் மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், மாநில பாடத்திட்டம் தேர்வுமுறையிலிருந்து மாறுபட்ட கட்டமைப்பை அவை கொண்டுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 10, 12ம் வகுப்பு தேர்வுகள் கட்டாயமாக உள்ளன. இந்நிலையில் இனி சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வு இருமுறை நடத்தப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

முதல் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்றும், இரண்டாம் கட்ட தேர்வை மாணவர்கள் விருப்பம் இருந்தால் எழுதலாம் என்று கூறப்பட்டுள்ளது. முதல் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் இரண்டாவது தேர்வு எழுதி மதிப்பெண் கூடுதலாக பெற இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இரண்டு தேர்வுகளில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறப்பட்டதோ அதை இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேசமயம் செய்முறை தேர்வுகள் ஒருமுறை மட்டுமே நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

மக்களவையில் SIR விவாதம்.. நாளை ராகுல் காந்தி பேச்சில் அனல் பறக்குமா?

50 காசு நாணயம் செல்லுமா? இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments