எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

Mahendran
புதன், 25 ஜூன் 2025 (17:15 IST)
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல் பிடிஎஸ் படிப்புக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. இதில் 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.  நடைபெறவுள்ளது.
 
இந்த நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூன் 6 ஆம் தேதி தொடங்கியது. இன்று  நிறைவடைய இருந்த நிலையில், வரும் ஜூன் 29 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.
 
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்னரே விண்ணப்ப பதிவு தொடங்கியிருப்பதால், இந்த ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments