Publish Date: Fri, 02 Aug 2024 (16:25 IST)
Updated Date: Fri, 02 Aug 2024 (16:26 IST)
சென்னையில் 17 வயது சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்டு உடலை அடையாறு ஆற்றில் வீசிய கொடூரம் நடந்துள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் அருகே பொதுமக்கள் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஆற்றின் கரையோரம் ஒரு சடலம் இருந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இறந்தது 17 வயது சிறுவன் என்றும் சிறுவனின் உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு இருந்ததையும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்தபோது எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் அருகே சஞ்சய் என்ற 17 வயது சிறுவன் தான் கொலை செய்யப்பட்டது என்பது தெரிய வந்தது. ஏற்கனவே இந்த சிறுவன் மீது சில வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து சிறுவனை கொலை செய்தது யார்? ஆற்றில் தூக்கி வீசியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அடையாறு ஆற்றின் மேம்பாலத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.