Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையின் 7 சதவீத நிலப்பரப்பு கடலில் மூழ்கும்: சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை..!

சென்னையின் 7 சதவீத நிலப்பரப்பு கடலில் மூழ்கும்: சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை..!

Siva

, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (16:11 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் உள்ள சில பகுதிகள் வரும் காலத்தில் கடலில் மூழ்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது 2040 ஆம் ஆண்டு வாக்கில் கடல் மட்டம் உயர்ந்து சென்னையின் ஏழு சதவீதம் நிலப்பரப்பு கடலில் மூழ்கும் என்று சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவு திடல், குடியரசு பொன் விழா நினைவு தூண், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் கடல் மட்ட உயர்வால் மூழ்கும் அபாயம் உள்ளது என்று சிஎஸ்டிஇபி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே 2050 ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள 570 நகரங்களில் உள்ள சில நிலப்பரப்புகள் கடலில் மூழ்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னைக்கும் அந்த ஆபத்து இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

புயலால் அவ்வப்போது சென்னைக்கு அபாயம் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது கடல் மட்டம் உயர்தல் என்பது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மாற்றம் என்றும் சராசரி கடல் நீர் மட்டும் பல அடியில் உயரும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட பல கடலோர பெரு நகரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளை விஞ்ஞானிகள் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் நிலையில் சென்னைக்கு இன்னும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயநாடு நிலச்சரிவு.. 4 நாட்கள் கழித்து பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை உயிருடன் மீட்பு..!