Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Siva

, வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (11:07 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைக்கப்பட்ட உடன் அதிக அளவு குறைந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளதாகவும் ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,430 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 51,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,885 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,080 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 91.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  91,700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு, கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!