Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

இன்று 15 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

Advertiesment
தமிழ்நாட்டில் மழை|சென்னையில் மழை|Tamil Nadu weather forecast|tamil nadu weather|Tamil Nadu rains|Chennai Rains
, வெள்ளி, 18 அக்டோபர் 2019 (08:10 IST)
நேற்று முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால் அண்ணா சாலை உள்பட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தில் உள்ளனர்.
 
இந்த நிலையில் இன்றும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் இந்த பட்டியலில் உள்ளது. இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் குறித்த விபரம் பின்வருமாறு:
webdunia
 
1 - சிவகங்கை
2 - புதுக்கோட்டை
3 - நாகை
4 - திருவாரூர்
5 - தஞ்சாவூர்
6 - திருவண்ணாமலை
7 - கோவை
8 - நீலகிரி
9 - திருநெல்வேலி
10 - தூத்துக்குடி
11 - கடலூர்
12 - விழுப்புரம்
13 - சென்னை
14 - காஞ்சிபுரம்
15 - திருவள்ளூர்
 
 
மேற்கண்ட 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் 15 மாவட்டங்களில் சில இடங்களில் மிக கன மழை பெய்யும் என்றும் இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1.45 மணி நேரம் நடந்த சசிகலா-சந்திரலேகா சந்திப்பு: தகவல் அறியும் சட்டத்தால் அம்பலம்!