வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மேற்குப் பருவமழைக் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்மழைப் பெய்து வருகிறது. நீலகிரி, வேலூர் ஆகியப் பகுதிகளில் வரலாறு காணாத மழைப் பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த வாரத்தில் ஆங்காங்கே மழைப் பெய்தது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களிலும், சென்னை உள்பட வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும். வளிமண்டல சுழற்சி காரணமாக ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்யும்’ எனத் தெரிவித்துள்ளது.