இன்றும் 15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (20:32 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 15,830 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11,13,502 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 15,830 பேர்களில் 4,640 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 77 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 13,728 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 14,043 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 990,919 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 116,868 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 218,80,233 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கொடுத்த பணத்தில் இழப்பீட்டு பணத்தில் மருமகன் கொண்டாட்டம்! மாமியார் கதறல்!

10 மாத குழந்தைக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு.. குலுக்கலில் கிடைத்த அதிர்ஷ்டம்..!

பயிர்ச்சேதமோ ரூ.72,466.. அரசு கொடுத்த இழப்பீடு வெறும் ரூ.2.30.. அதிர்ச்சி அடைந்த விவசாயி..!

டிவி சீரியல் நடிகைக்கு ஆபாச புகைப்படம், வீடியோ அனுப்பிய மர்ம நபர்.. காவல்துறை நடவடிக்கை..!

நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவரா? மத்திய அரசு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments