Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேலும் 14 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை: பெரும் பரபரப்பு!

Advertiesment
மேலும் 14 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை: பெரும் பரபரப்பு!
, செவ்வாய், 21 டிசம்பர் 2021 (07:30 IST)
ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த 55 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று இரவு புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 55 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 14 பேர் சிறைபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதமாற்ற தடைச்சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்: