இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆம், இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது, அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.