தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்றது. இதை அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், கடந்த மே மாதம் 22 ஆம் தேதி பேரணி நடைபெற்றது.
அமைதியாக நடைபெற்று வந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டதால் போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் மரணமடைந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்த ஷிப்பிங் கம்பெனி டிரைவர் ஜஸ்டின் மரணமடைந்தார்.
கலவரத்தின் போது போலீஸ் நடத்திய தடியடியில், படுகாயமடைந்த இவர் கடந்த ஐந்து மாதங்களாக கோமாவில் இருந்தார். அரசு மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்த இவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இதனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.