திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

Mahendran
வியாழன், 4 டிசம்பர் 2025 (10:22 IST)
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், 13 இந்து அமைப்பை சேர்ந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், தீபம் ஏற்றும் பொருட்கள் திடீரென கீழே இறக்கப்பட்டதால், மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.
 
இதனால் ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் மலைப்பாதை அருகே திரண்டு, காவல்துறையினரின் தடுப்புகளை தள்ளிவிட்டு மலை மீது ஏற முயன்றனர். இதனால் ஏற்பட்ட மோதலில் இரு காவலர்கள் உட்படப் பலர் காயமடைந்தனர். 
இதையடுத்து, 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பொது அமைதியை பாதுகாக்க திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments