10ஆம் வகுப்பு பொது தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவானி ஸ்ரீ என்ற 10ஆம் வகுப்பு மாணவி, தேர்வு முடிவை இன்று காலை பார்த்த போது, அவர் 500க்கு 21 மதிப்பெண் எடுத்திருந்தது தெரியவந்தது. இதனால் மன உளைச்சலையில் இருந்த அவர், திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு பார்த்தபோது, சுயநினைவு இழந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் சாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக போலீசார் உடலை கைப்பற்றி அனுப்பி வைத்தனர்.
ஷிவானி ஸ்ரீ 500க்கு 201 மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்ததால், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.