சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகளை பார்க்கும் இணையதளங்களில் லிங்குகள் இணைக்கப்படாமல் இருந்ததாகவும், இதனால் மாணவர்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது லிங்க் கிடைத்ததை அடுத்து மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர்.
சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை results.cbse.nic.in, cbseresults.nic.in, மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.
இந்த ஆண்டுக்கான தேர்வில் மொத்தம் 93.60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், இந்த ஆண்டு 0.06% அதிகம் தேர்ச்சி விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களை விட மாணவிகள் மீண்டும் ஒருமுறை அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 2.37% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 95 சதவீத மாணவிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டும் சிபிஎஸ்சி தேர்வில் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி விகிதம் காட்டியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.