Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்! – எப்படி பெறுவது?

Advertiesment
Exam results
, வெள்ளி, 24 ஜூன் 2022 (08:38 IST)
இன்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின.

11ம் வகுப்பு சேர்க்கை மற்றும் கல்லூரி சேர்க்கைக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 10, 12ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.nic.in தளத்தில் சென்று பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரத்தை அளித்து மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசாமில் வெள்ளப்பெருக்கு; நிலச்சரிவு! – உதவிகரம் நீட்டிய தலாய்லாமா!