Publish Date: Wed, 15 Jun 2022 (13:33 IST)
Updated Date: Wed, 15 Jun 2022 (15:15 IST)
ஜூன் 17 ஆம் தேதி 10வதுக்கான தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவிகத்துள்ளது.
இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகள் சேருவதற்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், ஜூன் 17 ஆம் தேதி 10வதுக்கான தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in தளத்தில் முடிவுகளை சரிபார்க்கலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.