Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுபானம் வாங்க வரிசையில் காத்திருந்த பெண்கள்: பரபரப்பு தகவல்

மதுபானம் வாங்க வரிசையில் காத்திருந்த பெண்கள்: பரபரப்பு தகவல்
, திங்கள், 4 மே 2020 (18:31 IST)
மதுபானம் வாங்க வரிசையில் காத்திருந்த பெண்கள்: பரபரப்பு தகவல்
கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே நாடு முழுவதும் இரண்டு கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவை முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றில் முக்கியமானது நாடு முழுவதும் மதுக்கடைகளை திறக்கலாம் என்பதுதான்
 
தமிழகம் புதுவை உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மதுக்கடைகள் இன்னும் திறக்கவில்லை என்றாலும் அண்டை மாநிலமான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கடந்த 40 நாட்களுக்கு மேல் மதுவை வாங்காமல் இந்த மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக விலகலையும் பொருட்படுத்தாமல் மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர்
 
இந்த நிலையில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது கடைகள் முன் நீண்ட வரிசைகளில் வெயிலில் காத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் உள்ள மதுபான கடை முன் இளம்பெண்கள் பலர் மது வாங்க வரிசையில் காத்திருந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தியாவசிய தேவையான காய்கறிகளைக்கூட வாங்குவதற்கு இந்த அளவுக்கு அவர்கள் வரிசையில் நின்று இருப்பாரக்ளா? என்பது சந்தேகமே என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூடப்படுகிறது கோயம்பேடு மார்க்கெட்: ஒரே நாளில் 500க்கும் மேல் கொரோனா எதிரொலி