மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் மருத்துவப்படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பரில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தற்போது நீட் தேர்வுக்காக மாணவர்கள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பு ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடும், பொருளாதாரரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தோர் மேற்கண்ட இடஒதுக்கீட்டை கோர விரும்பினால் ஆகஸ்டு 16 முதல் 20ம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.