மக்களவையில் நிறைவேறியது ஓபிசி இடஒதுக்கீடு மசோதா: 385 எம்பிக்கள் ஆதரவு
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (08:01 IST)
ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது
இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு பட்டியலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் அவர்கள் நேற்று மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்த இந்த மசோதாவுக்கு ஆதரவாக 365 உறுப்பினர்கள் வாக்களித்து எடுத்த இந்த மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது
இதன்மூலம் ஓபிசி பிரிவினருக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தாங்களே இட ஒதுக்கீடு தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்