Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை ...ஆயிரம் விளக்குத்தொகுதியில் ..குஷ்புவுக்கு பெருகும் ஆதரவு

Advertiesment
சென்னை ...ஆயிரம் விளக்குத்தொகுதியில் ..குஷ்புவுக்கு பெருகும் ஆதரவு
, வெள்ளி, 26 மார்ச் 2021 (23:40 IST)
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள திமுக வேட்பாளர் எழிலன் கொடுத்துள்ள நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய விஷயத்தைக் கூட மறந்து குறிப்பிட்டுள்ளது சமூகவலைத்தளங்களில் கேலி கூத்தாக மாறியுள்ளது.
 
காவல்துறையில் தன்னாவர்களே வந்து உதவி செய்வதும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கொண்டுவரப்பட்ட ஒரு அமைப்பு தான் ஃப்ரன்ஸ் ஆஃப் போலீஸ். 1993ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் அமைக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டது. காரணம், சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் போலீசாரால் தாக்கப்பட்டு காவல்நிலையத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அவர்கள் இருவரும் உயிரிழக்க ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் குழுவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 
 
 
இதன் காரணமாக ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் குழுவை தடை செய்ய டிஜிபி திரிபாதி தமிழக அரசு பரிந்துரைத்தார். அதனடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை விதித்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு தடை செய்த ஒரு அமைப்பை மீண்டும் கொண்டு வருவதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் திமுக வேட்பாளர் எழிலன். 
 
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவை எதிர்த்து திமுக சார்பில் எழிலன் போட்டியிடுகிறார். 
 
பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நாள்தோறும் தொகுதி மக்களை சந்தித்து அவர்களுடன் ஒன்றாக பழகி வரும் குஷ்புவுக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன. இந்த நிலையில் நேற்று குஷ்பு தனது தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றும், பெண் குழந்தை பிறந்தால் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் எனவும் மாணவிகளுக்கு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் வாக்குறுதிகளை அளித்தார். 
 
குஷ்புவின் இந்த வாக்குதிகளை பார்த்து ஆட்டம் கண்ட எழிலன் பெயருக்கு தான் பங்கிற்கு வாக்குறுதிகளை அளிப்போம் என எதையோ சொல்லி தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டார். 
 
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவிகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும், 100 மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும், தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கு என அவர்கள் குடியிருப்புக்கு அருகே தனிக்கழிவறை கட்டித்தரப்படும், ஆயிரம் விளக்கு தொகுதியில் இலவச Wi-Fi வசதி ஏற்படுத்தித்தரப்படும் என்றவர் இறுதியாக இடியை தூக்கி போட்டார். 
 
அதாவது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்த ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை ஏற்படுத்துவேன் என கூறியுள்ளார். இந்த ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் அமைப்பால் ஆங்காங்கே மக்களுக்கு தொந்தரவு ஏற்படுவது மட்டுமின்றி,  அடியாட்கள் போல பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்படிப்பட்ட ஒரு அமைப்பிற்கு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்ட நிலையில் அந்த தகவல் கூட அறியாமல் மீண்டும் அந்த ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை செயல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்து திமுகவின் எழிலன் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார் என்றே கூறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷீட்டிங் தளத்தில் வாக்குகள் சேகரித்த வேட்பாளர் !