உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை: அமைச்சர் அறிவிப்பு
சென்னையைச் சேர்ந்த பிரியா என்ற கால்பந்து வீராங்கனைக்கு கால் சவ்வு பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் ப்ரியாவின் மரணத்திற்கு தவறான சிகிச்சையே காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இரண்டு அரசு மருத்துவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறிய அமைச்சர் கால்பந்து வீராங்கனை மறைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவரது சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 17 வயதான பிரியா சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கும் சக கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது