கவிதை - பஞ்சுமிட்டாய்க்காரன்

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (15:26 IST)
கடலலை ஆரவாரித்தது போல
தெருவில் சிறார்களின் சப்தம்
வெளியே
பஞ்சுமிட்டாய்க்காரனைச் சுற்றி
வேடிக்கைப் பார்ப்பது போக
மிட்டாய் வாங்க போட்டிப் போட்டு
கையை நீட்டுவது ஒருபுறமாக 
 
அவன்
கையிலிருக்கும் கிலுகிலுப்பையை
ஆட்டியபடியே
நின்றுகொண்டிருக்க
 
அவனது
தலைப்பாகையையும் அழுக்கு
கந்தலாடையையும் கண்டு
தெரு நாய்கள்
குரைக்க குரைக்க அவன்
 
வியாபாரத்தில் குறியாக 
இருந்தான்
 
ஒரு ஏழைச்சிறுமி குறைந்த
காசை நீட்டியபோது அதை
வாங்காது
திருப்பிக் கொடுத்து
 
பஞ்சுமிட்டாயைக் கொடுத்து
கன்னத்தைக் கிள்ளி
பிளைன் கிஸ் தந்து
நகர்ந்ததைக் கண்டு
 
யாரும்
ஆச்சர்யப்படாமலில்லை
 
அந்த
பஞ்சுமிட்டாயின் சிவப்பு
நிறத்தைப் போலவே
அவனது வறுமையின் நிறமும்
தெரிந்துகொண்டிருந்தது
தொலைவில்....
 
- கோபால்தாசன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா?!. இதை ட்ரை பண்ணி பாருங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments