Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னெப் பாரு நெஞ்சக் கேளு! - கவிதை

என்னெப் பாரு நெஞ்சக் கேளு! - கவிதை
, வியாழன், 12 ஜனவரி 2017 (15:56 IST)
வெள்ளரிவெத சிரிப்பில புள்ள
வௌஞ்சி நிக்கிற கதிரப் பாரு!


 
 
மயங்கிக் கெடக்கும் மனசுல புள்ள
கெறங்கிக் கெடக்கும் உசுரப் பாரு!
 
பஞ்சுப்போன்ற நெஞ்சுல புள்ள
பற்ற வெச்ச கண்ணப் பாரு!
 
அரசமர அடியில புள்ள
அணைஞ்சி கெடக்கும் நெலவப் பாரு!
 
அருவிக்கர செடியில புள்ள
சிக்கிக் கெடக்கும் நெஞ்சப் பாரு!
 
கல்லுபோன்ற மழையில புள்ள
சுட்டெரிக்கும் வெயிலப் பாரு!
 
தலையக்கோதும் காத்துல புள்ள
வெரலு பத்தும் தீக்குச்சிப் பாரு!
 
ஆட்ட அழைக்கும் சாக்குல புள்ள
என்னெ அழைச்ச மனசப் பாரு!
 
மொக்கப் போடும் பேச்சில புள்ள
மனங்க பேசும் பேச்சப் பாரு!
 
அரச்சமஞ்ச முகத்தில புள்ள
அழுந்திக் கெடக்கும் என்னெப் பாரு!
 
உன்னெவச்ச நெஞ்சில புள்ள
உலகம் மொத்தம் நீதான் பாரு!
 
மனசு அடிக்கும் மணியில புள்ள
கனவு சத்தம் கேட்கும் பாரு!
 
அயிலமீனு துடிப்பில புள்ள
ஒடம்புக்குள்ள துடிப்பப் பாரு!
 
தரிசுமண்ணு வெடிப்பில புள்ள
மொளச்சு நிக்கும் செடியப் பாரு!
 
உன்னுள் வாழும் நெனப்பில புள்ள
ஆயுள் முழுதும் வாழ்வேன் பாரு!

-கோபால்தாசன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது ஜல்லிக்கட்டுக்கான யுத்தங்களின் காலம்..