மே 2020 - எண்ணியல் பலன்கள்: 5, 14, 23

வியாழன், 30 ஏப்ரல் 2020 (17:29 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு....

 
மற்றவர் நலனில் அதீத அக்கறை கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே, நீங்கள் செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம்  ஏற்படலாம். தேவையற்ற  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம்.

எனவே எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும் மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
 
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் உள்ள கருடமூர்த்தியை வணங்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மே 2020 - எண்ணியல் பலன்கள்: 4, 13, 22, 31