மே 2020 - எண்ணியல் பலன்கள்: 4, 13, 22, 31

வியாழன், 30 ஏப்ரல் 2020 (17:27 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட நான்காம் எண் அன்பர்களே, உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள்.

கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைத்துறையினருக்கு மிகப் பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம்.

எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். மாணவமணிகள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெருவெற்றி பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். அனைவருக்கும் வேலைப்பளு அதிகரிக்கும். 
 
பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மே 2020 - எண்ணியல் பலன்கள்: 3, 12, 21, 30