மே 2020 - எண்ணியல் பலன்கள்: 3, 12, 21, 30

வியாழன், 30 ஏப்ரல் 2020 (17:25 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
அனைவரின் அன்பையும் தன்வசமாக்கும் மூன்றாம் எண் அன்பர்களே, பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். ஆனால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு வரலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருங்கள்.

மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம். அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தாண பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது. புதிய வீடு மனை வாங்க தடைகள் ஏற்படலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைபளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள். 
 
பரிகாரம்: தினமும் சனி ஹோரை அல்லது சுக்கிர ஹோரையில் சிவன் கோவிலில் வலம் வரவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மே 2020 - எண்ணியல் பலன்கள்: 2, 11, 20, 29