Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நமது உணவில் மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூ ஏன் சேர்க்கவேண்டும்...?

Advertiesment
நமது உணவில் மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூ ஏன் சேர்க்கவேண்டும்...?
சமையலில் அரிதாகவே இடம்பெறுகிற ஒன்றாக வாழைப்பூ இருக்கிறது. வாழைப்பூவை சமைக்கத் தெரியாதவர்கள் ஒரு பக்கம் என்றால், வாழைப்பூவை ஆய்ந்து, சுத்தப்படுத்தி சமைப்பதற்கு அலுத்துக் கொண்டு அதைத் தவிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம்.
அறியாமையையும், அலுப்பையும் தவிர்த்து வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களின் வீடுகளில் ஆரோக்கியம்  தாண்டவமாடும் என்பதில் சந்தேகமில்லை.
 
நமது உணவில் காய்கறிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய உணவு வகைகளில் எப்போதுமே காய்கறிகள் ஒரு பகுதியாவது இடம்பெறுகின்றன. பெரும்பாலும் நமது உணவில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கள் இடம்பெறுகின்றன. காய்கள்  சேர்ந்த உணவுக் கலவை அல்லது தொட்டுக்கொள்ளும் ஒரு உணவாக காய்கறி இடம்பெறுகிறது.
 
சில காய்கறிகள் பொதுவாக நமது உணவில் வழக்கமாக தினசரி இடம் பெறுகின்றன. சில காய்கறிகள் பொதுவாக சமைக்கப்படுவதே  கிடையாது. இருப்பினும் மற்ற காய்கறிகளான கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், பாகற்காய் உள்ளிட்ட காய்களைப் போல இது பயன்படுத்தப்  படுவதில்லை.
 
.ஆயுர்வேத மருத்துவத்தில் பல காய்கறிகள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானதாக வாழைப்பூ முக்கிய இடம்  பிடித்துள்ளது. இதில் உள்ள நன்மை தரும் விஷயங்களால் இதை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. 
 
வாழைப்பூவில் அதிக காரம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது. வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆயுர்வேதத்தில் இது உடலில் பித்தத்தைத் தணிக்கும் குணம் கொண்டதாக கூறப்படுகிறது.
 
இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது வெப்பத்தால் ஏற்படும் பலவித நோய்களை - அதாவது, சிறுநீரகம் சார்ந்த நோய்கள், குடல் புண், இரைப்பை புண், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள், உள்ளிட்ட வற்றைக் குணப்படுத்த உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எளிதாக கிடைக்கும் எள்ளை உணவில் சேர்ப்பதால் இத்தனை பயன்களா...!!