Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொய்யா இலையில் டீ செய்து சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்...!

Advertiesment
கொய்யா இலையில் டீ செய்து சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்...!
கொய்யா இலையை டீ போல் செய்து குடித்து வந்தால், அது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, மூக்கு  அழற்சிகளை குணமாக்குகிறது.


கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
 
கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் பி6, கோலைன், விட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம்,  ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.
 
கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தால், அது பல்வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
 
கொய்யா இலையில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக  பயன்படுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது.

webdunia
கொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு தடைபட்டு, தைராய்டு சுரப்பை  சமநிலைப்படுத்துகிறது.
 
கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ செய்து, 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குணமாக்குகிறது.
 
கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு சிறிது தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடல் எடை குறைவதை உணரலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கே ஒட்டுமொத்த தீர்வல்ல! – மு.க.ஸ்டாலின் கோரிக்கை!