Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த மூலிகைக்கு இப்படி ஒரு சக்தி உண்டா...?

இந்த மூலிகைக்கு இப்படி ஒரு சக்தி உண்டா...?
பேய் மிரட்டி இலையை சாறு எடுத்து அரையங்குல அளவு எடுத்து அத்துடன் அரை சங்களவு நீர்விட்டு கொதிக்க வைத்து 2 மணிக்கு ஒருமுறை ஒரு சங்களவு குடித்து வர காலரா, அம்மை குணமாகும்.

பேய் மிரட்டி இலைச்சாறு 5 சொட்டு எடுத்து வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப் பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கும்.
 
பேய் மிரட்டி இலையைக் கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 50 மில்லியளவு குடித்து வர சீதவாதக் காய்ச்சல், முறைக் காய்ச்சல், மலக் கழிச்சல் குணமாகும்.
 
பேய் மிரட்டி இலையை 2 மட்டும் எடுத்து ஒரு கைப்பிடி நெற்பொறியுடன் சேர்த்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50  மில்லியளவு வீதம் 3 மணிக்கு ஒருமுறை குடிக்கக் கொடுக்க காலரா குணமாகும்.
 
பசி மிகுத்தல், குடல் வாயுவகற்றல்,வியர்வை பெருக்குதல், காச்சல் தணித்தல், சதை நரம்பு ஆகியவற்றைசுருங்கச் செய்தல், அசிவு தணித்தல் ஆகிய  குணங்களையுடையது.
 
உபயோகிக்கும் முறை: இதன் சமூலம் கசப்புச் சுவையுள்ளது இதைக் கியாழமிட்டுக் கொடுக்க வாந்தி பேதி, இருமல், சீதசுரம்போம். ஒரு பலம் சமூலத்தைத் தட்டி ஒரு மட்குடுவையில் போட்டு அரைப்படி சலம் விட்டு 1/8 படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 2 வேளை கொடுக்கலாம். 
 
இலையைக் கொதிக்க வைத்து வேது பிடிக்க விடாத வாதசுரம் தீரும். இலைச் சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்குக் கொடுக்க பல் முளைக்கும் போது  ஏற்படும் பேதி தீரும்.
 
இலையை நீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடிக்கச்சீத வாதசுரம், முறை சுரம், மலக்கழிச்சல் தீரும். பேய்மிரட்டியின் பச்சிலையை அகல் விளக்கின்  திரியாகப் போட்டு விளக்கேற்றி வைத்தால் பச்சை இலை எரியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த வகை பழங்களை அதிகம் எடுத்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்...!!