Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடர்த்தியான கூந்தலை பெறுவதற்கான சில குறிப்புக்கள் !!

Hair Problems
, திங்கள், 11 ஏப்ரல் 2022 (17:49 IST)
தேவையானப் பொருட்கள்: தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர், விளக்கெண்ணெய் - கால் லிட்டர், வசம்புப்பொடி - 5 கிராம், கரிசலாங்கன்னி பொடி - 5 கிராம், நெல்லிக்காய் பொடி - 5 கிராம், கருவேப்பிலை பொடி - 5 கிராம், மருதாணி பொடி - 5 கிராம், அரோமா ஆயில் - 2 சொட்டு.


செய்முறை:  ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் மற்றும் கால் லிட்டர் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலக்கவும். மேலே கூறிய அனைத்து பொடிகளையும் தனித்தனியாக காட்டன் துணியில் சிறு மூட்டைகளாக கட்டி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் கலந்து வைத்துள்ள எண்ணெய்யில் 2 சொட்டு அரோமா ஆயிலை சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். காட்டன் துணியில் கட்டி வைத்துள்ள சிறு மூட்டைகளை எண்ணெய்யில் மூழ்குமாறு வைக்கவும். அப்படியே ஒரு வாரம் நன்கு ஊற வேண்டும்.

ஒரு வாரம் முடிந்த பிறகு மூட்டைகளை எடுத்து விடவும். அந்த பொடியின் தன்மை அனைத்தும் எண்ணெயில் இறங்கி கலந்து இருக்கும்.

அந்த எண்ணெய்யை மிதமான தீயில் வைத்து சூடு செய்து தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும். பிறகு 1 மணி நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்று நல்ல அழகான, கருமையான, அடர்த்தியான கூந்தலை பெறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய் துர்நாற்றத்தை நீக்கும் அற்புத மூலிகை எது தெரியுமா...!!