துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டால் நமது உடலில் உள்ள இரத்தம் சுத்தமாவதோடு புதிய இரத்தமும் உற்பத்தியாகும்.
வயிற்று புழுக்களை அழிக்கவும், வாய்வு தொல்லையை போக்கவும் இந்த புதினா கீரையானது மருந்தாக பயன்படுகிறது.
வயிற்று போக்கு அதிகமாக இருந்தாலும் புதினா துவையலோ அல்லது சட்னியாகவோ சாப்பிட்டால் உடனடியாக வயிற்று போக்கு நீங்கும்.
புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
புதினாக் கீரையானது மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சாற்றை முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாவை குடிநீர் போல தயார் செய்து குடித்து வர எரிச்சல் குறையும்.
புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்துக் குடித்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.