Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சருமம் புதுப்பொலிவு பெற உதவும் கரித்தூள் பேஸ் மாஸ்க் !!

Charcoal face Mask
, வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (13:25 IST)
தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூ, 2 கேப்சூல் ஆக்டிவேட்டேடு கரித்தூள் (தேங்காய் ஓடு) பழைய பிரஸ் டோனர் க்ளேன்சர்.


முகத்தை முதலில் அழுக்குகள் இன்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு உங்களது முகத்தில் க்ளேன்சரை போட்டு நன்றாக மசாஜ் செய்து துடைத்து விட வேண்டும். க்ளேன்சர் இல்லை என்றால், பாலை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பளபளப்பாகும்.

மாஸ்க் தயாரிக்க முதலில் கரித்துண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூவையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். நான்-டாக்சிக் ஒயிட் க்ளூவிற்கு பதிலாக தேன் அல்லது முல்தானி மட்டியை இந்த கரித்துண்டுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு க்ரீம் போன்ற பதத்திற்கு வர வேண்டும்.

இந்த மாஸ்க்கை உங்களது முகம் முழுவதும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். முழுமையாக 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த மாஸ்க்கை முகத்திலேயே விட்டுவிடுங்கள். பின்னர் இந்த மாஸ்க்கை கீழ் இருந்து மேலாக உரித்து எடுக்க வேண்டும்.

மாஸ்க்கை உரித்து எடுத்தவுடன், தண்ணீரை கொண்டு கழுவ கூடாது. ஒரு சுத்தமான துணியால் முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சருமத்துளைகள் அடைவதற்காக டோனரை உபயோகிக்க வேண்டும்.

இந்த மாஸ்க்கை போட்டவுடன் குறைந்தது 8 மணிநேரத்திற்காவது சோப்பை பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம். முகத்தையும் கழுவ வேண்டாம். இதனால் முகத்திற்கு படிப்படியாக வியக்கத்தக்க மாறுதல்கள் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் கற்பூரவள்ளி !!