Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முழுத்தாவரமும் சிறந்த மருத்துவ பயன் கொண்ட நொச்சி !!

Advertiesment
முழுத்தாவரமும் சிறந்த மருத்துவ பயன் கொண்ட நொச்சி !!
நொச்சி புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை.

மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை  நீக்கும். 
 
நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. 
 
வேர் சிறுநீர் போக்கும் சளி அகற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான  செயல்திறன் கொண்டது.
 
மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
 
முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம்  ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பற்களை வெள்ளையாக வைத்திருக்க சில இயற்கை குறிப்புகள் !!