Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நுரையீரலை பலப்படுத்த சிறந்த ஆடாதோடை மூலிகை !!

நுரையீரலை பலப்படுத்த சிறந்த ஆடாதோடை மூலிகை !!
ஆடாதொடை சிறு செடியாகவும் ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.

ஆடாதொடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ‘ஆயுள்  மூலிகை’ என்றும் அழைக்கின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது.
 
நெஞ்சில் சளி, அதனுடன் வலி உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதொடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து  கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.
 
நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க  உதவுகிறது.
 
ஆடாதோடை இலை, தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.
 
சளித் தொல்லை அணுகாது. நுரையீரல் பலம் பெறும். ரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடாதோடைக்கு உண்டு.
 
ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேலையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுத்து வந்தால், சளி,  இருமல், இரைப்பு, நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல்  போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல் தொண்டைக்கட்டு போன்றவையும் நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணத்தக்காளி கீரையின் முக்கியமான மருத்துவ குணங்கள் !!