Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும் செவ்வாழை !!

Advertiesment
உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும் செவ்வாழை !!
செவ்வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவரின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகும், தொற்றுநோய்கள் நெருங்காது.

செவ்வாழை பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பழத்தில் அதிகளவு  நார்சத்து உள்ளதால் மலசிக்கல் வராமல் தடுப்பதுடன், செரிமான கோளாறுகளையும் போக்குகிறது.
 
செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் A சத்து பார்வையை தெளிவடையச் செய்யும். கண் பிரச்சனைகளை அகற்றிவிடும். வயதானவர்களுக்கு ஏற்படும் கண்பார்வை குறைபாட்டைச் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் சரிசெய்யலாம்.
 
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம். இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது. இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களையும் தடுக்கிறது.
 
இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் மூட்டு வலிகளை குறைப்பதுடன் முடி உதிர்வையும் குறைகிறது. இரத்த உற்பத்தியினை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
 
செவ்வாழையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, அதனால் தினம் ஒரு செவ்வாழைப்பழம் இரவு உணவிற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து சாப்பிட்டு வர செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மலச்சிக்கல், வாயு தொல்லை வராமல் தடுக்கலாம்.
 
நரம்புத் தளர்ச்சி கொண்டவர்களின் கை, கால்கள் நடுக்க மேற்படும். அதற்கு செவ்வாழைப்பழத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குறையும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று மேலும் 2,487 பேருக்கு கொரோனா உறுதி ! 30 பேர் பலி !!