Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் நிவாரணம் தரும் வேப்பிலை !!

Advertiesment
சரும பிரச்சனைகள்
அனைத்து சரும பராமரிப்பிலும் வேம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு மற்றும் மஞ்சள் அரைத்து பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழிவினால் முகம் பொலிவு  பெறும்.

முகத்தில் தோன்றும் பருக்கள் போன்றவற்றிற்கு எதிராக நன்கு செயல் படும். இதே போல் வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில்  உதவுகிறது.
 
வேப்ப மரக் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கினால் அது பற்களின் ஈறுகளை வலுப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நகச்சுத்தி வேப்பிலையை மைபோல்  அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து, அதை நோய் கண்ட இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் விரைவில் குணமாகும்.
 
வேப்ப எண்ணெய்யுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்து கொண்டு உறங்கினால் கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பித்து கொள்ளலாம்.
 
வேப்பம் பூவை நிழலில் உலர்த்தி சம்பிராணியுடன் சேர்த்து தூபம் போட்டால் காற்றில் உள்ள கிருமிகளை அழித்து விடும். அதே போன்று இலைகளை உலர்த்தி  தூபம் போட்டால் கொசு போன்றவை வீட்டிற்குள் வராது.
 
வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் ஆறிய தண்ணீரை கொண்டு முகம் மற்றும் கை, கால்கள் கழுவி வந்தால் சரும பிரச்சனைகள் அனைத்தும்  குணமாகும்.
 
வேப்பம் பழத்தில் செய்யும் சர்பத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், ரத்தம் சுத்தமடையும். தோல் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால்,  சொறி, சிரங்குகளை உற்பத்திச் செய்யும் நுண்கிருமிகள் அழியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் நெல்லிக்காய் !!