Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பலவிதங்களிலும் நோய்களுக்கு நிவாரணம் தரும் முடக்கத்தான் கீரை !!

Advertiesment
பலவிதங்களிலும் நோய்களுக்கு நிவாரணம் தரும் முடக்கத்தான் கீரை !!
மூட்டுகளை முடக்கி வைக்கும் முடக்கு வாத நோயை விரட்டுவதால், இது முடக்கற்றான் (முடக்கு அறுத்தான்) என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. பொதுவாக, வாதம், முடக்குவாதம், வாயுத்தொல்லை போன்றவற்றுக்கு இந்த முடக்கத்தான் நல்ல நிவாரணம் தரக்கூடியது.

ஒரு பிடி முடக்கத்தான் இலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் பங்காக சுண்டக்காய்ச்சி வடிகட்டி, ஒருவேளைக்கு 25 மில்லி வீதம் காலையும், மாலையும்  சாப்பிட்டு வந்தால் வாதம், வாயுத்தொல்லை விலகும்.
 
கை, கால் மற்றும் முகம் போன்ற பகுதிகளில் வரக்கூடிய வாதக்கோளாறுகளுக்கு முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் குணம் கிடைக்கும்.
 
தோசை மாவுடன், அரைத்து வைத்த முடக்கத்தான் கீரையை கலந்து தோசை வார்த்துச் சாப்பிடுவதால் குணம் கிடைக்கும். இதை அவ்வப்போது செய்து வரலாம். வாதம், வாயுத்தொல்லை உள்ளவர்கள்தான் என்றில்லாமல் எல்லோருமே இந்த முடக்கத்தான் தோசையைச் சாப்பிடலாம். காரக்குழம்பு, சாம்பார், ரசம், சூப் என  பலவிதங்களிலும் முடக்கத்தான் கீரையைச் சமைத்து உண்ணலாம்.
 
முடக்கத்தான் ரசம் வைத்து அருந்துவதால், தாராளமாக மலம் போகும். ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையுடன், கால் ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், தக்காளி ஒன்று, வெள்ளைப்பூண்டு 5 பல் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து பொறுக்கும் சூட்டில் அருந்தினால், மலச்சிக்கலுக்கு நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக,  இரவு வேளையில் இதை செய்தால் காலையில் தாராளமாக மலம் போகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுமா பன்னீர்...?