Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாய்ப்புண்ணை குணப்படுத்தும் வீட்டு மருத்துவம்..!

Mouth Sore
, ஞாயிறு, 26 மார்ச் 2023 (09:03 IST)
நம் உடலில் பித்தம் அதிகரித்தல், உடல்சூடு, இரும்புச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் வாய்ப்புண்ணை வீட்டில் உள்ள மருத்துவகுணம் கொண்ட பொருட்களை வைத்தே குணமாக்கலாம்.
  • உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும் வகையில் அடிக்கடி தண்ணீர் குடித்து வந்தால் வாய்ப்புண் வராது.
  • பாலில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
  • வாயில் புண் உள்ள இடத்தில் சிறிது வெண்ணெய் அல்லது தேன் தடவி வந்தால் வாய்ப்புண் குணமடையும்.
  • தண்ணீரில் நெல்லிக்காய் இலையை போட்டு கொதிக்க வைத்து இளம்சூட்டில் வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் சரியாகும்.
  • மணத்தக்காளி மற்றும் அகத்திக்கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமடையும்.
  • புதினா இலையை அரைத்து அதன் சாறை புண் உள்ள பகுதியில் தடவி வர வாய்ப்புண் மெல்ல குணமாகும்.
  • மாசிக்காயை பால் சேர்த்து அரைத்து, தேன் சேர்த்து தடவி வர வாய்ப்புண் நாளடைவில் சரியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?