முதியோர்களுக்கான எளிமையான உடற்பயிற்சிகள்!
உடற்பயிற்சி என்பது குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அவருடைய வயதுக்குத் தகுந்தாற்போல் செய்ய வேண்டியது முக்கியமாகும். அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை செய்து தங்கள் உடலைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்
முதியோர்களுக்கு கண் பார்வை குறைவது, குறைந்த ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால் கண்டிப்பாக அவர்கள் தினமும் உடற்பயிற்சிகளை செய்து கொள்ள வேண்டும்
ஆனால் அதே நேரத்தில் அவர்களது வயதுக்குத் தகுந்தாற்போல் எளிய வகை உடற் பயிற்சிகளை செய்து கொள்ளவேண்டும். நின்றுகொண்டே செய்யும் உடற்பயிற்சிகள் மெதுவாக நடந்து கொண்டு செல்லும் உடற்பயிற்சிகள் ஆகியவை முதியவர்களுக்கு ஏற்றது.
குதி காலில் நிற்பது, உள்ளங்கால் விரல்களில் நிற்பது, நின்ற இடத்திலேயே காலை மாறிமாறி தூக்குதல் போன்ற எளிய வகை உடற்பயிற்சிகள் செய்யலாம். மேலும் நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே பக்கவாட்டில் நடப்பது பின்புறமாக நடப்பதையும் அவர்கள் முயற்சி செய்யலாம்
ஆனால் அதே நேரத்தில் இந்த உடற்பயிற்சியினை பயிற்சியாளர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது