Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவிலிருந்து இப்படிதான் தப்பித்தேன்! – ரகசியத்தை சொன்ன மு.க.ஸ்டாலின்!

Advertiesment
MK Stalin
, ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (10:56 IST)
சமீபத்தில் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்ட நிலையில் தான் எவ்வாறு அதிலிருந்து மீண்டேன் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் வாகனம் இல்லா போக்குவரத்தை ஊக்கப்படுத்த “Happy Streets” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை அண்ணா நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவர்களுடன் பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளை விளையாடி மக்களை உற்சாகப்படுத்தினார்.

பின்னர் பேசிய அவர் உயற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அப்போது “என்னை 70 வயது நபர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. உடற்பயிற்சியே நம்மை இளமையாக வைக்கும். உடற்பயிற்சி செய்ததால்தான் என்னால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வர முடிந்தது. வெளிநாடு சென்றால் என்னையும், உதயநிதியையும் கண்டால் அண்ணன், தம்பி என்றே நினைப்பார்கள்” என்று உடற்பயிற்சியின் அவசியம் குறித்து பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரங்கு காய்ச்சலை அடுத்து தக்காளி காய்ச்சல்: கண்காணிப்பை தீவிரப்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்!