Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாச சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கும் பத்மாசனம் !!

Padmasana
, புதன், 6 ஏப்ரல் 2022 (15:36 IST)
செய்முறை: விரிப்பில் நேராக அமரவும். இடது காலை மடித்து வலது தொடையில் வயிற்றை ஒட்டியவாறு வைக்கவும். பின் வலது காலை மடித்து இடது தொடை மேல் போடவும்.


கைகள் கால் முட்டில் பட்டு தரையில் விரல் படுமாறு `சின்' முத்திரை (மூன்று விரல்களை மட்டும் நீட்டிய முத்திரை)யில் வைக்கவும். முதுகெலும்பு நேராக இருக்கவேண்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து, மெதுவாக வெளி விடவும். இந்தப் பயிற்சியை இரண்டு நிமிடம் செய்யவும். பின் கண்களை மெதுவாகத் திறந்து கால்களை அகற்றி நேராக உட்காரவும்.

பத்மாசனத்தில் அமர்ந்ததும் சுவாசத்தை நிதானமாகவும், முழுமையாகவும் இழுத்து நிதனமாக விட வேண்டும். சுவாசத்தை இழுக்கும் நேரத்தை விட அதனை வெளிவடும் நேரம் சற்று அதிகமாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது பழகினால் சுவாசம் தானாகவே நிதானமடையும்.

யோகாசனம் தினமும் செய்து வர, சுவாசத்தை மனதால் கவனித்து வந்தோமானல் எண்ண அலைகளை மனமானது இழந்து அமைதியடையும். ஆரம்பத்தில் பத்மாசனத்தில் அமர்வது சிறிது சிரமமானலும், படிப்படியாக பழக்கத்துக்கு வந்துவிடும், அதேபோல் செய்யும் நேரத்தையும் சற்று அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.

பலன்கள்:

சுவாச சம்பந்தமான நோய்கள் வராது. முதுகெலும்பை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நுரையீரல் மீக அதிக நன்மைப் பெறும். வாதம், மூலம், நரம்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் அருகில் வராது.

ஞாபக சக்தி வளரும். மூளைக்கு நன்கு ரத்தம் பாய்வதால், மூளை சிறப்பாகவும், சுறுசுறுப்புடனும் செயல்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவை மிகுந்த வேர்க்கடலை குழம்பு செய்ய !!