Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன தெரியுமா...?

எந்த பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன தெரியுமா...?
பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
மாம்பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாமிரம் உள்ளதால், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், இரும்புச் சத்து நிறைந்தது. எனவே, பெண்கள், கர்ப்பிணிகள், மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.
 
கால்சியம் சத்துக்கள்: எலும்புகளை உருவாக்குகின்ற அல்லது பலபடுத்தக்கூடிய கால்சியம் சத்தை தக்காளிப்பழம், ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.
 
இரும்புச் சத்துக்கள்: ஆப்பிள், பேரீச்சம் பழம், திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் இரத்தத்திற்கு இரும்பு சத்தினை  அளிக்கின்றன.
 
பொட்டாசியம் சத்துக்கள்: ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது. இவற்றை  உண்டாலே இச்சத்தானது கூடும்.
 
பாஸ்பரஸ் சத்துக்கள்: மூளை பலத்தை அதிகரிக்க இந்த பாஸ்பரஸ் நமக்கு அதிகளவில் உதவிபுரிகின்றன. பாதாம் பருப்பு, அக்ரூட், அத்திபழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.
 
பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், குடலைப் பாதுகாக்கிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. குறைந்த அளவில் வைட்டமின்  ஏ மற்றும் கரோட்டின் பி உள்ளிட்ட ஃபிளவனாய்ட் உள்ளதால், பார்வைத் திறன் மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
பழங்கள், பலன்கள், ஆரோக்கியம், இயற்கை மருத்துவம், சத்துக்கள், Fruits, Benefits, Health, Natural Medicine,  Nutrition
 
In any fruit What are the benefits; Do you know...? 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயற்கை மருத்துவத்தில் பயன்தரும் மருதாணி!!