Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்துகள் முழுமையாக கிடைக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா!!

சத்துகள் முழுமையாக கிடைக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா!!
ஒவ்வொரு சமையல் முறைக்கும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. சில சமையல் முறைகளால் சமைக்கப்பட்ட உணவுகளில், சத்துகள் அப்படியே இருக்கும். ஆனால், எண்ணெய்ச் சமையல் போன்ற சமையல் முறைகளில் சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. மாறாக, கெட்டக் கொழுப்பும் சேர்ந்துவிடும். இதில் எது உடலுக்கு நல்லது, எவற்றைத் தவிர்க்கவேண்டும் எனப் பார்ப்போமா?

 
* ஆரோக்கியமான உடல்நலத்துக்கு 70 சதவிகிதம் பாசிட்டிவ் உணவுமுறைகளைச் சாப்பிடவேண்டும். 30 சதவிகிதம் நியூட்ரல் உணவு வகைகளைச் சாப்பிடவேண்டும்.
 
* டேபிள் சால்ட் தவிர்த்து இந்துப்பு, கல்லுப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம். 
 
* காய்கறிகளைக் கழுவிய பிறகே நறுக்குங்கள். மாறாக, நறுக்கிய பிறகு கழுவினால் காய்கறிகளில் உள்ள சத்துகள் நீங்கிவிடும். 
 
* அவித்தல், வேகவைத்தல் முறையில் பயன்படுத்தும் காய்கறிகளைப் பெரிய அளவில் நறுக்கி சமைத்தால், 80 சதவிகித சத்துகள் கிடைக்கும். 
 
* வறுத்தலும் பொரித்தலும் நம்மை நோய்க்கு கொண்டு செல்லக்கூடிய சமையல் முறைகளாகும். ஆகவே, இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடக் கூடாது. 
 
 * சமைக்காத உணவுகளில் என்சைம்கள் நிறைந்துள்ளதால், அவை இன்சுலின் சுரக்க உதவும். இதனால் சமைக்காத உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்பவருக்குச் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். சமைக்காத உணவுகள் என்றால் பழங்கள், காய்கறிகள், முளைகட்டிய பயறுகளைச் சொல்லலாம்.  
 
* ரீஃபைண்டு எண்ணெய்களின் பயன்பாட்டை அறவே தவிர்த்து, செக்கு எண்ணெயை பயன்படுத்தலாம். 
 
* அடிக்கடி பச்சடி செய்து சாப்பிடுங்கள். அதற்குக் காய்கறிகளை சிறியதாக நறுக்கி பயன்படுத்துவது நல்லது. பழவகைகளில் எவற்றையெல்லாம் தோலை நீக்காமல் சாப்பிட முடியுமோ அவற்றை அப்படியே சாப்பிடுங்கள். 
 
* சிலர் காலையில் சீக்கிரம் எழுந்து சமைக்க வேண்டும் என்பதற்காக முதல்நாளே நறுக்கி வைத்துவிட்டு மறுநாள் அதைப் பயன்படுத்துவார்கள். இது தவறு. காய்கறிகளை நறுக்கியதும் சமைக்க வேண்டும் அல்லது உண்ண வேண்டும். 
 
* நோயால் அவதிப்படும்போது, பெரும்பாலும் பழங்களையும் இளநீரையும் உணவாக உட்கொள்ளுங்கள். வாரம் ஒருநாள் பழங்கள் அல்லது காய்கறிகளை மட்டும் உணவாகச் சாப்பிடுங்கள்.  
 
* தினசரி உணவில் குறைந்தது 100 கிராம் அளவுக்குக் காய்கறிகள், பச்சடி, பழங்களைச் சாப்பிடுங்கள். இது உடலை தூய்மைப்படுத்தும். 
 
* கீரை வகைகளைச் சுத்தப்படுத்தி, நன்றாக அலசி, சிறிது உப்பு போட்டு சரியான பதத்தில் வேகவைத்து உண்பது நல்லது. தானியங்கள், பருப்புகள், பயறு வகைகளைத் தோல் நீக்காமலும் முளைகட்டியும் சாப்பிடுவது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்ய...!