Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எளிதாக கிடைக்கக்கூடிய முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள்...!

Advertiesment
எளிதாக கிடைக்கக்கூடிய முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள்...!
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அத்தகையை  கீரையை எப்படி சாப்பிட்டு வந்தால், அதனுடைய மருத்துவ நன்மைகளை பெறலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

 
முருங்கை கீரையின் நன்மைகள்:
 
* முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். முருங்கை காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
 
* முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின்  வலிகள் நீங்கும்.
 
* முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
 
* பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய  நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.
 
* முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. வாரத்தில் இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக சாப்பிட்டால், ரத்தம் மற்றும் சிறுநீர் சுத்தம் அடைகிறது. முருங்கைக்காயை சூப் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல், மூட்டு வலி குணமாகும்.
 
* கர்ப்பப்பையின் குறைகளை போக்கி, கருத்தரிக்கும் திறனை ஊக்குவித்து பிரசவத்தை துரிதப்படுத்த உதவுகிறது. முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
 
* ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல் வறட்சியை போக்கும் கை, கால்கள் பராமரிப்பு குறிப்புகள்!!