பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.
குதிரைவாலி: செரிமான சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சர்க்கரை நோயாளிக்களுக்கான சிறந்த உணவு. இதில் நிறைந்துள்ள கால்சியம் எலும்பை வலுப்படுத்தும்.
வரகு: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வயிற்றுப் புண், முதுகுவலி, மூட்டுவலி போன்றவற்றைச் சரிசெய்யும். ரத்த சுத்திகரிப்பானாகச் செயல்படும். மேலும், ரத்த உற்பத்திக்கும் உதவும்.
சோளம்: செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். உடல்பருமன் குறைக்க உதவும். செல்களை புத்துணர்வு பெறச்செய்யும். செல்களின் வளர்ச்சிக்கு உதவும்.
கம்பு: டைப் 2 சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச் சுற்றல், கிறுகிறுப்பு, நாவறட்சி போன்றவை நீங்க மோரில் கலந்து பருகலாம்.
சாமை: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். ரத்தசோகையைப் போக்கும். நார்ச்சத்து நிறைந்தது. உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, மலச்சிக்கலைச் சரிசெய்யும்.
திணை: உடனடி எனர்ஜியைத் தரும். செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். கொழுப்பைக் குறைக்கும். உடல்பருமனைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதய நோய்கள் வராமல் தடுக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.
கேழ்வரகு: உடல்பருமன் குறைய உதவும். சர்க்கரைநோயைக் குணப்படுத்த உதவும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும்.