Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராம்பு எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா...!

Webdunia
கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த  நிவாரணி.
உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் செய்கிறது. ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
 
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள்  வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
 
நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா  குணமடையும்.
 
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால்  ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
 
நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
 
கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை  பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
 
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி  எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்: லான்செட் ஆய்வறிக்கை

டாய்லெட்டுக்குள் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? மூலம் வரும் ஆபத்து! - மருத்துவர்கள் எச்சரிக்கை!

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments